426,000 பயானாளர்களை கொண்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமானது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குழாய் நீர் வசதியை பெற்றுகொள்ளவதை அதிகரிப்பதோடு சுகாதார மேம்பாட்டையும் வழங்குகிறது ,இத்திட்டத்தோடு தொடர்புடைய நிறுவனங்களின் திறனை வலுப்படுதுவதோடு , இலங்கையில் தற்போது 44% ஆக காணப்படும் பாதுகாப்பான குடி நீர் வழங்கல் பரம்பலை 60% ஆக உயர்த்துகின்றது .
நகரங்களில் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை: 23,600
கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை: 64,900
தோட்டபுறங்களில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை: 15,800
சுகாதர மேம்பாட்டு பயனாளிகளின் எண்ணிக்கை: 43,000
பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை: 107,000
நீரை பெற்றுகொள்வதற்கும் வறுமைக்கும் இடையே நெருங்கிய ஒரு தொடர்பு அவதானிக்கப்பட்டுள்ளது, மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஏழு மாவட்டங்களிலும் குறித்த தெரிவிற்கான குறிகாட்டிகள் பின்வருமாறு
- பாதுகாப்பில்லாத / மேம்படுத்தபடாத நீரை பெற்று கொள்ளும் மக்களின் விகிதம்
- குழாய் நீர் வளத்தை பெற்று கொள்ள முடியாத குடும்பங்களின் விகிதம்
- வறண்ட வலயத்தில் உள்ள மாவட்டங்கள்
முன்னுரிமைப்படுத்தபட்ட ஏழு மாவட்டங்கள்
வட மாகாணம் - முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி
ஊவா மாகாணம் - பதுளை மற்றும் மொனராகலை
சபரகமுவ மாகாணம்- கேகாலை மற்றும் இரத்தினபுரி
திட்டத்தின் முடிவில் நாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதனாலும் , மந்த போசனத்தை குறைப்பதோடு அனைவருக்குமான சம பங்கீட்டின் ஊடாக சமுக ஒருங்கிணைப்பை உருவாக்கல்.