Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

கூறு 1- நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதி உட்கட்டமைப்பு

கூறு 1

தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் நகர , கிராம மற்றும் தோட்டப்புற பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் சேவையினை விரிவுபடுத்தலுக்கு இத்திட்டமானது உதவுகின்றது .

உள்ளூராட்சி அதிகார சபைகளுடனான கூட்டிணைப்பின் ஊடாக புதிய, மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் சார்ந்த நீர் வழங்கல் திட்டங்களை நடமுறைப்படுத்துவதோடு , நகர திட்டங்கள் , சிறுநகர் நீர் வழங்கல் திட்டங்களின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துதல் .

தோட்டப்புறம் சார் நீர் வழங்களில் குறித்த பிரதேசங்களுக்கு மட்டுமல்லாது , அத் தோட்டப்புறத்திற்கு அண்மையில் உள்ள கிராமங்களுக்கும் இத்திட்டம் ஊடாக நீர் வழங்கல் மற்றும் மலசல கூட வசதி வழங்கப்படுகிறது .

தெரிவு செய்யப்பட்ட ஏழு மாவட்டங்களிலும் ஒரு உப கூறாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன .

சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் , திட்டம் தொடர்பான சமூகங்களுக்கான விழிப்புணர்வு , சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களை பாடசாலை மாணவர்களிடையே கொண்டு வரல் ஆகியன இத்திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்தபடுகிறது.