Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

கூறு 2 - நிறுவன ரீதியான திறன் விருத்தி

நிறுவனம் சார் திறன் விருத்தி இத்திட்டத்தின் இன்னுமொரு கூறாக காணப்படுகின்றது , தேசிய சமுக நீர் வழங்கல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக , பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது தேவையேற்படின் குறித்த நிறுவனங்களுக்கு சேவையினை வழங்குதல்

இக் கூறானது பின்வரும் செயல்களுக்கு ஆதரவளிக்கின்றது.

  1. வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் கண்காணிப்பு மற்றும் மதிப்பிடல் முறையினூடாக இத்திட்டத்தின் செயற்பாடு மற்றும் நிலைப்பேறு போன்ற குறிகாட்டிகள் அடையாளப்படுத்தப்படும் , குறிப்பாக செலவு திறன் விருத்தி மற்றும் கண்காணிப்பிற்கு தொடர்பு சாதனங்கள் உபயோகிக்கப்படவுள்ளன .
  1. வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலில் பொருத்தமான கட்டுமானத்தை சமுதாயம் சார் அமைப்புகளுக்கு உருவாக்குவதோடு மறுசீரமைப்பு மற்றும் மீள் செலவீனங்களுக்கு  உத்திகளை கையாளல் மற்றும் சமுதாயம் சார் அமைப்புகள் குறித்த திட்டத்தையும் , மலசல கூட வசதிகளையும் சிறப்பாக கொண்டு நடத்த ஊக்கமளித்தல் குறித்த திட்டத்தின் செயல் திறன் மற்றும் நிலை பேறு தொடர்பான நம்பகமானதும் , தொடர்ச்சியான கண்காணிப்பையும் ஊக்கபடுத்தல் மேலும் இத்திட்டத்தில் உள்ளடங்கும் சமுதாயம் சார் அமைப்புகளையும் சட்ட சார் அமைப்புக்களையும் சட்ட அங்கீகாரம் உள்ள நிறுவனங்களாக மாற்றல்.
  1. கிராமிய மற்றும் தோட்டப்புறங்களில் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான முறை சார் அணுகுமுறை , கண்காணிப்பு மற்றும் மதிப்பிடல் தொடர்பான தகவல்களுக்கு பயன்படுத்தபடுகிறது . இதனூடாக எல்லா சமுதாயம் சார் அமைப்புகள் மற்றும் நீர் வழங்கல் திட்டங்களின் செயல் திறனை மேம்படுத்த உதவுகின்றது .