நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் உலகவங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபா 1020 மில்லியன் செலவில் வடிவமைக்கப்பட்ட “பம்பகின்ன” நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017.11.02 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான மாண்புமிகு ரவூப் ஹக்கீம் , பிற அமைச்சரவை அமைச்சர்கள் ,மாகாண அரசியல் பிரமுகர்கள் , நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினுடைய திட்ட முகைமையாளர் N.U.K ரணதுங்க ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்