Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

WaSSIP

நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம்

நாகதீப கிராமிய நீர் வழங்கல் திட்டமானது  திட்டத்தின் செயற்பாடு தொடர்பாக கண்காணிக்க வந்த உலக வங்கியின்  தூதுக்குழு மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினுடைய பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 14.11.2017 அன்று மக்களின் பாவனைக்காக ஆரம்பிக்கப்பட்டது. 22.01.2018 அளவிலேயே இத்திட்டம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதற்கு முன்னராகவே நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தினத்திலே திட்டத்தின் செயற்பாடு தொடர்பாக கண்காணிக்க வந்த உலக வங்கியின்  தூதுக்குழுவானது சுகாதார வசதிகளை பெறுவோரையும் பார்வையிட்டது .

 

 

IMG 4828

IMG 4988

IMG 20171114 125240

IMG 20171114 151813

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் உலகவங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட “மாதம்பே” கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017.11.02 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  மாண்புமிகு ரவூப் ஹக்கீம் , பிற அமைச்சரவை அமைச்சர்கள் ,மாகாண அரசியல் பிரமுகர்கள் , நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினுடைய திட்ட முகைமையாளர் N.U.K ரணதுங்க ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .

 

20171102 151526

22894361 1153768038088384 354991218009562269 n

IMG 2047

IMG 2066

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் உலகவங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபா 1020 மில்லியன் செலவில் வடிவமைக்கப்பட்ட “பம்பகின்ன” நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017.11.02 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  மாண்புமிகு ரவூப் ஹக்கீம் , பிற அமைச்சரவை அமைச்சர்கள் ,மாகாண அரசியல் பிரமுகர்கள் , நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினுடைய திட்ட முகைமையாளர் N.U.K ரணதுங்க ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்

 

IMG 1863

IMG 1884

IMG 1924

IMG 2020