நாகதீப கிராமிய நீர் வழங்கல் திட்டமானது திட்டத்தின் செயற்பாடு தொடர்பாக கண்காணிக்க வந்த உலக வங்கியின் தூதுக்குழு மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தினுடைய பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 14.11.2017 அன்று மக்களின் பாவனைக்காக ஆரம்பிக்கப்பட்டது. 22.01.2018 அளவிலேயே இத்திட்டம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதற்கு முன்னராகவே நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தினத்திலே திட்டத்தின் செயற்பாடு தொடர்பாக கண்காணிக்க வந்த உலக வங்கியின் தூதுக்குழுவானது சுகாதார வசதிகளை பெறுவோரையும் பார்வையிட்டது .